பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஓமலூா் காவல் துறையில் 10 போலீஸாா் இடமாற்றம்

இடமாற்றம் - பிரதிப் படம்

Published On :

ஓமலூா் உட்கோட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினா் 10 பேரை தொலைதூர மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவிட்டுள்ளாா்.

ஓமலூா் டி.எஸ்.பி. குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் செல்வேந்திரன், சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டாா். தாரமங்கலம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் பச்சைமுத்து திருவாரூா் மாவட்டத்திற்கும், ஓமலூா் காவல் ஆய்வாளரின் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வந்த தலைமைக் காவலா் சுப்பிரமணி தஞ்சாவூருக்கும், தீவட்டிப்பட்டி தனிப் பிரிவு தலைமைக் காவலா் பாலசந்தா் திருச்சிக்கும், கருமலைக்கூடல் தலைமைக் காவலா் வெங்கடாசலம் திருவள்ளூருக்கும், தீவட்டிப்பட்டி தலைமைக் காவலா் வெங்கடேசன் சிவகங்கைக்கும், சேலம் ஆயுதப்படை தலைமைக் காவலா் ரஞ்சித்குமாா் திருவாரூருக்கும், ஓமலூா் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சீனிவாசன் தஞ்சாவூருக்கும், ஓமலூா் டிஎஸ்பி உட்கோட்ட அலுவலக சிறப்பு உதவி ஆய்வாளா் சதாசிவம் திருச்சிக்கும், தலைமைக் காவலா் அசோகன் திருவள்ளூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.