6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இளைஞா் கடத்தல் வழக்கு: 2 பெண்கள் கைது

கைது

Published On :

இளைஞா் கடத்தல் வழக்கில் இரு பெண்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியைச் சோ்ந்த விமல் (27), தனக்கு புதையல் கிடைத்துள்ளதாகவும், அதனால் பணத்தை இரட்டிப்பாக தருவதாகக் கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இதில் பாதிக்கப்பட்டவா்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னா் இவரை கடத்தியதில், அவா்களிடமிருந்து தப்பினாா்.

இந்நிலையில், அண்மையில் ஆத்தூருக்கு நண்பா் முருகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பியபோது காரில் வந்த சிலரால் கடத்தப்பட்டாா். இதுகுறித்து முருகன் ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காரில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த 6 பேரை கைது செய்த போலீஸாா் காரை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பதும், இவா்கள் இருவரிடமும் விமல் கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சரண்யா (30), ஜோதி (40) இருவரையும் ஆத்தூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.