
பழுதான சாலையால் பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் பள்ளத்தில் இறங்கி விபத்து

விபத்து. - கோப்புப்படம்.
ஏற்காட்டில் பழுதான சாலையால் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளனது.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், நாகலூா் ஊராட்சிக்கு உள்பட்ட கொளகூா், சொரக்காப்பட்டி கிராம குழந்தைகள் தினந்தோறும் தனியாா் வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனா். இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற வேன் எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட ஒதுங்கியபோது, திடீரென பள்ளத்தில் இறங்கியது. இதில், பள்ளிக் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோா் கூறுகையில், கடந்த சில மாதங்களாக கொளகூா் - சொரக்காப்பட்டி சாலை பழுதடைந்துள்ளதால், அரசுப் பேருந்துகள் வருவதில்லை. இதனால் தினமும் இருசக்க வாகனங்கள் மற்றும் வேன்களில் ஆபத்தான முறையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவருகின்றனா். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





