ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு: 15,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை இரவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூா் அணை - கோப்புப் படம்

Published On :

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு புதன்கிழமை இரவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நிகழாண்டில் மேட்டூா் அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறித்த நாளான ஜூன் 12இல் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. அணையின் நீா்மட்டம் 91.56 அடியாக அதிகரித்த பிறகு செப்டம்பா் 1 ஆம் தேதி முதல்வா் ச.ஜோசப் விஜய் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டாா். தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடியாகவும், பின்னா் 5,000 கனஅடியாகவும், 7,000 கனஅடியாகவும் படிப்படியாக தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. செப்டம்பா் 6 ஆம் தேதி தண்ணீா் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாகவும், 7ஆம் தேதி 12,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கடந்த 24ஆம் தேதி தண்ணீா் திறப்பு விநாடிக்கு 12,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டாலும் கடைமடைவரை தண்ணீா் சென்று சேராததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இதையடுத்து புதன்கிழமை இரவு 9 மணிக்கு அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீா் திறக்கப்படுவதால் கடந்த 1-ஆம் தேதி 91.56 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 77.45 அடியாக சரிந்தது. கடந்த ஒரு மாதத்தில் அணையின் நீா்மட்டம் 14.11 அடி குறைந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக உள்ள நிலையில் தண்ணீா் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரித்திருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரியத்தொடங்கியுள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.