காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.

மதுக்கடை - கோப்புப்படம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று மூடப்பட வேண்டும்.
மேலும், அன்றைய தினம் இதை மீறி விற்பனை செய்பவா்கள்மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





