ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆவின் பால் விற்பனை விலை சொன்னது ரூ.2; உயர்ந்தது ரூ.4

வேலூர், செப். 8: ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாகத் தமிழக அரசு அறிவித்தது; ஆனால், நடைமுறையில் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்

Updated On :20 செப்டம்பர் 2012, 5:26 pm

வேலூர், செப். 8: ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாகத் தமிழக அரசு அறிவித்தது; ஆனால், நடைமுறையில் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு ரூ.2-ம், விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்துவதாகத் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

தற்போது அட்டைகளுக்கு மட்டும் சமன்படுத்திய பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.7.90-ல் இருந்து ரூ.8.90-ஆக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சில்லரை விலைக்கு வாங்குவோருக்கு அரை லிட்டர் ரூ.8.50-ல் இருந்து ரூ.9.75-க்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை தட்டுப்பாட்டை காரணம் காட்டி ரூ.10-ஆக வசூலிக்கப்படுகிறது. (லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு).

ஆனால், நிலைப்படுத்திய பால் (பச்சை நிற பாக்கெட்) மாதாந்திர அட்டை வைத்திருப்போருக்கு, அரை லிட்டர் ரூ.9.25-ல் இருந்து ரூ.10.75 வரையும், சில்லரை விற்பனையில் அரை லிட்டர் ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. இதில், அட்டை வைத்திருப்போர் லிட்டருக்கு ரூ.3-ம், அட்டை இல்லாதவர்கள் லிட்டருக்கு ரூ.4-ம் கூடுதலாகச் செலுத்துகின்றனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்த கொள்முதல் முகவர்கள் 4 பேர், சில்லரை விற்பனை முகவர்கள் 365 பேர். இவர்கள் மூலம் தினசரி 78 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில், சமன்படுத்திய பால் 50 ஆயிரம் லிட்டர்களும், நிலைப்படுத்திய பால் 28 ஆயிரம் லிட்டரும் விற்பனையாகின்றன.

மாதாந்திர அட்டைகளுக்கு மட்டும் தினசரி 19 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே விற்பனையாகிறது. மீதமுள்ள 59 ஆயிரம் லிட்டர் பாலும், சில்லரை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அரசு அறிவித்தாலும், ஒரு லிட்டர் பாக்கெட் கிடைப்பதே இல்லை. இரண்டு அரை லிட்டர் பாக்கெட் வாங்கும்போது லிட்டருக்கு ரூ.24 செலவிட நேர்கிறது. விலை உயர்வு ரூ.4.

நிர்வாகச் செலவினங்களைக் காரணம் காட்டி, நிலைப்படுத்திய பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியிருக்கிறது ஆவின் நிர்வாகம். முதல்வரின் அறிவிப்பும், விலை உயர்வும் வெவ்வேறாக இருக்கின்றன. விலை உயர்வை அறிவித்த முதல்வருக்குத் தெரிந்தே, இந்த கூடுதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.