மண் சாலையாக மாறும் பாப்பம்பட்டி பிரதானச் சாலை
பழனி, ஜன. 9: பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள ஒரு கிலோ மீட்டர் தூர சாலை பராமரிப்பின்றி மண் சாலையாக மாறி வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பழனியிலிருந்து 20 கி.மீ.


பழனி, ஜன. 9: பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள ஒரு கிலோ மீட்டர் தூர சாலை
பராமரிப்பின்றி மண் சாலையாக மாறி வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பழனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பாப்பம்பட்டியை அடுத்துள்ளது குதிரையாறு அணைக்கட்டு. சுமார் 253 மில்லியன் கனஅடி கொண்ட இந்த அணைக்கு, கொடைக்கானல் மலைத்தொடரில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. இந்த அணை மூலம், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சமீபத்தில் பெய்துவந்த கனமழையால், குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து திறந்துவிடப்பட்டதில், சாலைகள் மூழ்கின. இதனால், இந்த சாலையில் பல
இடங்கள் பழுதாகியுள்ளன. மேலும், பாப்பம்பட்டி-குதிரையாறு அணைக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், தற்போது இந்தச் சாலையை சீர்படுத்த பொதுப்பணித் துறைக்கு ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சாலை அமைக்க தற்போது, பாப்பம்பட்டி அரசு மருத்துவமனை முதல் குதிரையாறு அணை வரை சர்வே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பாப்பம்பட்டி நகர் துவக்கப் பகுதியில் இருந்து அரசு மருத்துவமனை வரையுள்ள 1 கி.மீ. தூரத்துக்கு மிகவும் மோசமாகப் பழுதாகியுள்ள சாலையை சீர்செய்ய எந்த சர்வேயும் செய்யப்படவில்லை. மேலும், இந்த பகுதியில்தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது.
இது குறித்து, பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் கோபி கூறியது:
தற்போது சர்வே செய்யப்பட்டு வரும் இடம் மட்டுமே பொதுப்பணித் துறை வசம் உள்ளது. பாப்பம்பட்டி நகர் துவக்கப் பகுதியிலிருந்து அரசு மருத்துவமனை வரையிலான சாலை ஒன்றியம் வசம் உள்ளது என்றார்.
அதேபோன்று, வட்டாட்சியர் குணசேகரன் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஆவணங்களை ஆய்வு செய்ததில், மேற்படி இடம் ஒன்றியத்துக்கு சொந்தமானதும், புறம்போக்கு என்றும் தெரிவித்தார்.
ஆனால், இது குறித்து பழனி ஒன்றியப் பொறியாளர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, இந்த சாலை எங்கள் வசமில்லை என்றும், நெடுஞ்சாலைத் துறை அல்லது பொதுப்பணித் துறையினருடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
இது குறித்து, பழனி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தெரிவிக்கையில், சாலையின் சீர்கேடு குறித்து பலமுறை அரசுக்கும், பல்வேறு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டு மிகுந்த முயற்சியின்பேரில், பொதுப்பணித் துறைக்கு ரூ. 75 லட்சம் நிதி பெற்றுத் தந்துள்ளோம்.
ஆனால், இந்த குறைந்த தூர சாலை யாருடையது என்று கூடத் தெரியாமல் நிர்வாக அதிகாரிகள் உள்ளது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தெரியாத நிலையில், மக்கள் எங்கே சென்றுதான் முறையிட முடியும் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...