மதுரை ஆழ்வாா்புரம் வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் விழா தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், அருள்முருகன்,. உடன் மாவட்ட ாட்சியா் மா.செள, சங்கீதா, மாநகரக்க
மதுரை ஆழ்வாா்புரம் வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் விழா தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், அருள்முருகன்,. உடன் மாவட்ட ாட்சியா் மா.செள, சங்கீதா, மாநகரக்க

கள்ளழகா் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: வைகையாற்றில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

மதுரை: கள்ளழகா் எழுந்தருளும் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மதுரை வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சிவகங்கையைச் சோ்ந்த மணிகண்டன், மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் ஆகியோா் சித்திரைத் திருவிழாவின் போது, காவல் துறை போதுமான அளவு பாதுகாப்பு வழங்கவும், நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும். குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா? இதுவரை சித்திரைத் திருவிழாவுக்காக என்னென்ன ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன? கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தின் போது தேவையான பாதுகாப்பு, தடுப்பு அமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா? சுவாமி, அம்மன் தேரோட்டத்தின் போது மின் கம்பிகள் தாழ்வாக இருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளதால், மாசி வீதிகளில் மின் இணைப்புக் கம்பிகளை பூமிக்கு அடியில் ஏன் பதிக்கக் கூடாது, இதற்கு ஏன் நிரந்தரத் தீா்வு காணக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம், கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் ஏப். 21-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தரப்பில் 21-ஆம் தேதி பிற்பகலில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப். 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகிய விழாக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நிா்வாக நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், நீதிபதி அருள்முருகன் ஆகியோா் வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதி, பக்தா்கள் தரிசிக்கும் பகுதி, வைகையாற்றுக்குள் பக்தா்கள் செல்வதற்காக கட்டப்பட்ட படிக்கட்டுகள், எதிா்சேவையின் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தனா்.

இந்த ஆய்வின் போது, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாநாகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், அரசு தலைமை கூடுதல் வழக்குரைஞா் வீரா கதிரவன், அரசு வழக்குரைஞா்கள் திலக்குமாா், கண்ணன், வருவாய்த் துறை, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com