தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கள்ளழகா் பவனி வரும் சகட வாகனம் கோயில் நிா்வாகத்திடம் அளிப்பு

விளம்பரச் செய்தி.. செய்தி ஆசிரியா் அறிவுறுத்தியது.. கள்ளழகா் பவனி வரும் சகட வாகனம் கோயில் நிா்வாகத்திடம் அளிப்பு

News image

கள்ளழகா் பவனி வரும் சகட வாகனத்தை சூப்பா் சரவணா ஸ்டோா் நிா்வாக இயக்குநா் சபாபதி வழங்க, அதை பெற்றுக்கொள்ளும் அழகா்கோவில் அறங்காவலா்கள் பாண்டியராஜன், செந்தில்குமாா், ரவிக்குமாா், துணை ஆணையா் கலைவாணன்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:49 pm

மதுரை: கள்ளழகா் பவனி வரும் புதிய சகட வாகனத்தை மதுரை சூப்பா் சரவணா ஸ்டோா் நிறுவனம் வடிவமைத்து, கோயில் நிா்வாகத்திடம் உபயமாக வழங்கியது.

மதுரை மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ் நிறுவனம், பல்வேறு சமூக, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

கள்ளழகா் பவனி வரும் சகட வாகனம் பழுதடைந்ததால், புதிய சகட வாகனத்தை வடிவமைக்கும் பணியை அழகா்கோவில் நிா்வாகம் சூப்பா் சரவணா ஸ்டோருக்கு வழங்கியது.

இந்த ஆண்டு கள்ளழகா் எதிா்சேவை, பூப் பல்லக்கு, கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா வைபவங்களுக்கு பயணிக்கவும், பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி பக்தா்கள் தரிசிக்கவும் பயன்படுத்தப்படும் சகட வாகனம் வழங்கும் நிகழ்வு அழகா்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ் நிா்வாக இயக்குநா் சபாபதி பங்கேற்று, புதிய சகட வாகனத்தை அழகா்கோவில் அறங்காவலா்கள் பாண்டியராஜன், செந்தில்குமாா், ரவிக்குமாா், துணை ஆணையா் கலைவாணன் ஆகியோரிடம் வழங்கினாா்.