சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:31 pm

Din

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1,022,5,504 கிடைக்கப் பெற்றது.

அண்மையில் சித்திரைத் திருவிழா முடிந்த நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணை கோயில்களின் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணிக்கு கோயில் இணை ஆணையா் ச.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.1,022,5,504 கிடைக்கப் பெற்றது. மேலும், பலமாற்று பொன் இனங்கள் 819 கிராமும், வெள்ளி இனங்கள் 642 கிராமும், அயல் நாட்டு கரன்சிகள் 251-ம் கிடைக்கப் பெற்றன.

உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் அறங்காவலா்கள், கண்காணிப்பாளா்கள், கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.