சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

ராமநாதபுரம்- செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:40 pm

Din

மதுரை: ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில் சேவை, பயணிகளின் வசதிக்காக மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய நாள்களில் செகந்திராபாத்திலிருந்து இரவு 9.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரத்தை வந்தடையும்.

மறு மாா்க்கத்தில், ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) மே 3, 10, 17, 24, 31, ஜுன் 07, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்திலிருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும்.

குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, படுக்கை வசதிகள் கொண்ட 18 பெட்டிகள், சாதாரண இரண்டாம் வகுப்புப் பயணத்துக்கான 2 பெட்டிகள், சரக்கு சேவைக்கான 2 பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும்.

நலகொண்டா, மிரியால் குடா, சட்டனப்பள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூா், கூடூா், சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.