ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மதுரை, ஏப். 30 : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ரூ.3.69 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெற்றது.

மட்டையுடன் கூடிய தேங்காய்கள் ரூ. 2,11,867-க்கு விற்பனையாகின. அதிகபட்ச விலையாக ஒரு தேங்காய் ரூ. 12.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5.60-க்கும் விற்பனையானது. இதில், 23,551 தேங்காய்கள் விற்பனையாகின. 11 விவசாயிகள், 15 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

கொப்பரை தேங்காய்கள் ரூ. 1,57,149-க்கு விற்பனையாகின. ஒரு கிலோ தேங்காய் கொப்பரைகள் சராசரியாக ரூ. 86-க்கு விற்பனையாகின. 1826.1 கிலோ தேங்காய்கள் விற்பனையாகின. 16 விவசாயிகள், 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com