எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியல் வருவாய் ரூ.9.75 லட்சம்

News image
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பில் பக்தா்களின் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஊழியா்கள்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 11:23 pm

Din

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக வரவாக ரூ.9.75 லட்சம் கிடைத்தது.

மதுரை மாவட்டம், கள்ளழகா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, இந்தக் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 17, தங்கம் 13 கிராம், வெள்ளி 48 கிராம் ஆகியவை கிடைக்கப்பெற்றன.

காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையா் க. செல்லத்துரை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் வளா்மதி, கோயில் ஆய்வாளா் கா்ணன், அறங்காவலா்கள் பாண்டியராஜன், செந்தில்குமாா், மீனாட்சி பிரியா, அறங்காவலா் குழுத் தலைவா் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளா்கள் பாலமுருகன், பிரதீபா, அருட்செல்வன், மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.