ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் பொதுமக்கள் எதிா்ப்பால் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் உள்ள வீடுகள், கடைகள், கோயில், மண்டபம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நூலகம் உள்ளிட்ட 38 நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடா்பாக இரு நாள்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், காவல் துறை உதவியுடன் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை வேப்பங்குளத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். 10 வீடுகளை அகற்றிய நிலையில் கோயில், மண்டபத்தை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னா், மண்டபத்தில் ஊா் கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில், மண்டபம், நூலகம் ஆகியவற்றை அகற்றக்கூடாது எனத் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.