பெண் மானபங்கம்: இளைஞா் கைது
முன்விரோதத்தில் வீடு புகுந்து பெண் மான பங்கப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


மதுரை: மதுரை அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து பெண் மானபங்கப்படுத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் இளைஞரைக் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள வடபழஞ்சி அம்பேத்கா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளிக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொழிலாளி வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டுக்குள் ராஜ்குமாா் (21), அவரது நண்பா்கள் செல்வராஜ், அருண்குமாா் ஆகியோா் புகுந்து, அவரது மனைவியைத் தாக்கி மானபங்கப்படுத்தினராம். இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனா். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...