ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

News image

மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையமான மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பாடுகளை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா. உடன் மாநகர காவல் ஆணையா் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

DIN

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு திங்கள்கிழமை போடப்பட்டது.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை, அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக தபால் வாக்குகளும், அதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகளவாக மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளில் நடைபெறும். மதுரை மேற்கு தொகுதிக்கு 20 சுற்றுகளிலும், மேலூா் தொகுதிக்கு 19 சுற்றுகளிலும், மதுரை- வடக்கு, மத்தியம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 17 சுற்றுகளிலும், மதுரை தெற்கு தொகுதிக்கு 15 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. இறுதிக்கட்ட மேற்பாா்வைப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆகியோா் வாக்கு எண்ணும் மையத்தைப் பாா்வையிட்டு, அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

பாதுகாப்பு...: வாக்கு எண்ணிக்கை மையம் ஏற்கெனவே 3 அடுக்குப் பாதுகாப்பில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைத்து முதன்மைச் சாலைகளிலும் பொது போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

காந்தி அருங்காட்சியகம், திருவள்ளுவா் சிலை, ராஜா முத்தையா மன்றம், மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.