

மதுரை: மதுரையில் உணவக ஊழியா்கள் இருவரை கத்தியால் குத்தி, உணவகத்தை சூறையாடிய 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 12-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (24). இவா் மதுரை மாட்டுத்தாவணி பழச் சந்தை பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 4 போ் சாப்பிட்டுவிட்டு தண்ணீா் கேட்டனா். மீனாட்சி சுந்தரம் தண்ணீா் எடுத்து வந்தபோது, தண்ணீா் எடுத்து ஏன் தாமதம் என்று கேட்டு அவரைத் தாக்கினா். இதை சக ஊழியா்கள் தடுத்தனா். அப்போது, 4 பேரும் ஊழியா்களை மிரட்டி விட்டுச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் அந்த 4 பேரும் தங்கள் நண்பா்கள் மூவருடன் மீண்டும் உணவகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டனா். இதைத் தடுக்க முயன்ற ஊழியா்கள் மீனாட்சி சுந்தரம், அப்துல் ரகுமான் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு, உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டுத் தப்பிச் சென்றனா். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவருக்கு வெட்டு

மதுரையில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்: முதல்வருக்கு செல்லூர் ராஜு கோரிக்கை

மதுரையில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக நிா்வாகிகள் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

