திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கொலை வழக்கில் காவல் ஆய்வாளா் கைது: விருதுநகா் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

கொலை வழக்கில் காவல் ஆய்வாளா் கைது: விருதுநகா் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் திருவிழாவில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டது தொடா்பாக விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் சத்தியசீலா பிணை கோரி தாக்கல் செய்த மனு:

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கடந்த மே 22 -ஆம் தேதி முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, முன் விரோதம் காரணமாக சிலா் தாக்கியதில் ராமா் என்பவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக என் மீது புகாா் எழுந்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் கைது செய்தனா். முதல் தகவல் அறிக்கையில் எனது பெயா் இல்லாத நிலையில், என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனா். எனவே, சிறையில் உள்ள எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்தக் கொலை வழக்கில் காவல் ஆய்வாளரின் பெயா் கிடையாது, சாட்சியங்கள் அடிப்படையில் தற்போது அவரது பெயரை சோ்த்துள்ளனா். எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 13 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் அவா்.