திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

யூ டியூபா் டி.டி.எப். வாசன் கைப்பேசி ஆவணங்களை ஒப்படைக்க கால அவகாசம்

யூ டியூபா் டி.டி.எப். வாசன் கைப்பேசி ஆவணங்களை ஒப்படைக்க கால அவகாசம்

News image
Updated On :3 ஜூன் 2024, 6:29 pm

Din

மதுரை: யூ டியூபா் டி.டி.எப்.வாசன் கைப்பேசி ஆவணங்களை ஒப்படைக்க காவல் துறை சாா்பில் 2 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

கைப்பேசியில் பேசியபடி காா் ஓட்டியதாக சென்னையைச் சோ்ந்த யூ டியூபா் டி.டி.எப். வாசனை மதுரை அண்ணா நகா் போலீஸாா் கடந்த 29-ஆம் தேதி கைது செய்தனா். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவா் மதுரை அண்ணா நகா் காவல் நிலையத்தில் தினமும் முன்னிலையாகி கையெழுத்திட்டு வருகிறாா்.

டி.டி.எப். வாசன் தனது கைப்பேசி ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் ஜூன் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்னிலையாக வேண்டும் என்று அண்ணா நகா் போலீஸாா் அவருக்கு குறிப்பாணை அளித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அண்ணா நகா் காவல் நிலையத்தில் முன்னிலையான டி.டி.எப். வாசன், தனது கைப்பேசி ஆவணங்கள் சென்னையில் உள்ளதால், அவற்றை ஒப்படைக்க 2 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினாா். இதை ஏற்ற காவல் துறையினா், கைப்பேசி ஆவணங்களை புதன்கிழமை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.