புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விருதுநகா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளுக்கு கூடுதல் பேருந்துகள்

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:17 am

Din

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு மாணவா்கள் கால தாமதமின்றி செல்வதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விருதுநகா் மண்டல போக்குவரத்துக் கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து காலை 8.20, 8.50, 9.19 மணிக்கும் ராஜபாளையத்திலிருந்து காலை 8.52 மணிக்கும், கல்லூரியிலிருந்து மாலை 4 மணிக்கும் நகா் பேருந்துகள் புறப்படும். கான்சாபுரத்திலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் பேருந்து வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக கல்லூரிக்குச் செல்லும்.

திருச்சுழி கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் பேருந்துகள்: அருப்புக்கோட்டையிலிருந்து காலை 9.15 மணிக்கும், காரியாபட்டியிலிருந்து காலை காலை 8.15 மணிக்கும், கல்லூரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கும் புறப்படும். நரிக்குடியிலிருந்து கல்லூரி வழியாக காலை 9.25, 9.35 மணிக்கும், கல்லூரியிலிருந்து பிற்பகல் 3, 3.15 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

சாத்தூா் மேட்டமலை அரசு கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் பேருந்துகள்: சிவகாசியிலிருந்து காலை 8.05, 8.25, 8.40, 8.50, 9, 9.05, 9.10 மணிக்கும், பிற்பகல் 1.40, 1.50, 2, 2.15, 2.25, 2.40, 2.55 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும். சாத்தூரிலிருந்து காலை 8.05, 8.20, 8.30, 8.45, 9 மணிக்கும், பிற்பகல் 1.30, 1.50, 2, 2.20, 2.30, 2.35 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

சிவகாசி அரசுக் கல்லூரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: சிவகாசியிலிருந்து காலை 8, 8.10, 8.11, 8.20, 8.30, 8.40, 8.55 மணிக்கும், பிற்பகல் 2.35, 2.55, 3.15, 3.30, 3.40, 3.50, 4 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி அரசுக் கல்லூரி வழியாகச் செல்லும் பேருந்துகள்: காலை 7.45, 7.55, 8.10, 8.25, 8.30, 8.45, 8.55, 9 மணிக்கும், பிற்பகல் 2.10, 2.25, 2.35, 2.45, 2.50, 2.55, 3.10, 3.25, 3.30, 3.35, 3.40, 3.45, 4 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சி அரசுக் கல்லூரிக்கு இயக்கப்படும் பேருந்துகள்: அருப்புக்கோட்டையிலிருந்து காலை 7.45, 8.35 மணிக்கும், செட் டிக்குறிச்சியிலிருந்து பிற்பகல் 1.45, 2.15, 2.35, 2.45 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்படும். அரசு கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்தப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த புகாா்களை 94875 99132 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.