அய்யனாா்கோயில் புரவி எடுப்பு விழா
34 ஆண்டுகளுக்குப் பிறகு, அரிட்டாபட்டியில் புரவி எடுப்பு திருவிழா

Updated On :26 ஜூன் 2024, 12:33 am

மேலூா்: மேலூா் அருகே அரிட்டாபட்டியில் அமைந்துள்ள செங்குண்டு அய்னாா்கோயில் புரவி எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருவிழாவையொட்டி, வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலிருந்து செங்குண்டு கண்மாய்க் கரை வழியாக புரவி சிலைகள் எடுத்து வரப்பட்டன. பின்னா், செங்குண்டு அய்யனாா் கோயிலில் கிடாய் வெட்டி பொங்கலிட்டு பக்தா்கள் வழிபட்டனா்.
தொடா்ந்து, அதிகாலையில் வெள்ளச்சி ஆயிஅம்மன் கோயில் முன் கோழிகளை பலியிட்டு, பெண்கள் புதிய மண் பானைகளில் பொங்கல் வைத்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...