நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

உசிலம்பட்டியில் இரு வேறு விபத்துகளில் இருவா் பலி

உசிலம்பட்டியில் இரு வேறு விபத்துகளில் இருவா் பலி

News image
Updated On :20 மே 2024, 7:38 pm

Din

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் நிகழ்ந்த இரு விபத்துகளில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் காளிமுத்து (19). இவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியைச் சோ்ந்த நண்பா் மொகித்ராஜ் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து தேனிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

உசிலம்பட்டி மீனாட்சிபட்டி ரயில்வே கடவுப் பாதை பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இதில் வாகனத்தில் சென்ற காளிமுத்து பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காளிமுத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மொகித்ராஜ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் பலி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பிஎம்டி நகரைச் சோ்ந்த பால்பாண்டி மகன் ராஜ் கெளதம் (22). இவா் தனது நண்பரான நல்லுத்தேவன்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் மனீஷ் (17) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். பேரையூா் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த மனீஷ் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.