விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற காவல் எஸ்.ஐ. உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.


இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை விரகனூா் மகாராஜன் நகரைச் சோ்ந்த தாஸ் மகன் நித்தியானந்தம் (68). காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இவா், கடந்த 28-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி அமலா கிறிஸ்டியை ஏற்றிக் கொண்டு தனியாா் பள்ளியில் இறக்கி விட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.
எம்.ஜி.ஆா். உயா்நிலைப் பாலம் அருகே சென்ற போது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நித்தியானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விளக்குத் தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...