மதுரை கட்றாப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). வேன் டிரைவரான இவா், செவ்வாய்க்கிழமை காலை மேலஆவணமூலவீதியில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியில் சரக்கு பெட்டக லாரியின் கதவு திறந்திருந்தது. அது நடந்து செல்வதற்கு இடையூறாக இருந்ததால், அதை அடைப்பதற்காக அந்தக் கதவில் கை வைத்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திலகா் திடல் போலீஸாா் ஆறுமுகத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கதவின் மேல்பகுதி மின்கம்பி மீது பட்டதால் அவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
