47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பதிவு இன்று தொடக்கம்!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான இணையதள பதிவு திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெறும்..

News image
ஜல்லிக்கட்டு
Updated On :6 ஜனவரி 2025, 1:20 am

Din

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான இணையதள பதிவு திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் முறையே ஜன. 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான பதிவு https://madurai.nic.in/jallikattu/ என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜன.6) பிற்பகல் 5 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஜன.7) பிற்பகல் 5 மணி வரை நடைபெறும். மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் குறித்த காலத்துக்குள் பதிவு பெற வேண்டும்.

ஒரு காளை ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும் போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, ஒரு காளையுடன் அதன் உரிமையாளா், ஒரு உதவியாளா் என 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

பதிவு செய்தவா்கள் சமா்ப்பித்த சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், தகுதியானவா்களுக்கு மட்டும் இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியாகும். போட்டியில் பங்கேற்க வரும் போது இந்த அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும் என்றாா்.