வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே இளைஞா் கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு இளைஞா் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துமணி (28). இவா் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், முத்துமணி செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நண்பா் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மூன்று போ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, அருகில் கிடந்த கல்லை எடுத்து முத்துமணியின் தலையில் தூக்கிப்போட்டுக் கொலை செய்துவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பினா்.

இது குறித்த தகவலின் பெயரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் சென்று, முத்துமணியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா்.