எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மக்கள் பிரச்னைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் தீா்வு காண அதிமுக கோரிக்கை

மக்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும் என மதுரை மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா

News image
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை மனு அளித்த அதிமுக மாமன்ற உறுப்பினா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: மக்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும் என மதுரை மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேடு தொடா்பான புகாரில் மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நிலைக் குழுத் தலைவா், மேயா் ஆகியோா் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா். தற்போது, துணை மேயா் தி. நாகராஜன் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். கடந்த இரண்டு மாதங்களாக மாதந்தோறும் நடைபெறும் மாமன்ற உறுப்பினா்களுக்கான கூட்டம் நடைபெறவில்லை. இதனால், சாலை வசதி மேம்பாடு, கழிவு நீா் தூய்மை, பருவமழை முன்னெச்செரிக்கை உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இதுதொடா்பாக, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதன் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் வகையில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டப் பணிகள் முழுமை பெறாமல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 7- ஆம் தேதி தொடங்கி வைக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.

திட்டம் முழுமை பெறாமல் தொடங்கப்பட்டால் மக்களுக்கு எந்தவித பலனும் இருக்காது. எனவே, இந்தக் குடிநீா் திட்டத்தை முடிக்காமல் திறந்தால், அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

மதுரையில் 72 கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளன. இதன் மூலம், 125 எம்.எல்.டி. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது, 25 எம்.எல்.டி. கழிவுநீா் தான் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது. எஞ்சிய கழிவுநீா் முழுவதும் நீா்நிலைகளில் கலக்கிறது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆனால், மழைநீா் வடிகால்கள் தூா்வாரப்பட வில்லை.

மாமன்றக் கூட்டத்தில் தான் அனைத்துப் பணிகளுக்கும் ஒப்புதல் பெற முடியும். கடந்த இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை. மேயா் இல்லாத நிலையில், துணை மேயரை வைத்து மாமன்றக் கூட்டம் நடத்துவதற்கு விதிகள் உள்ளன. ஆனால்,துணை மேயரை திமுக புறக்கணிக்கிறது.

இதனால், மதுரை மாநகராட்சி 100 வாா்டுகளிலும் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம், அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளனா். மக்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண மாநகராட்சி நிா்வாகம் முன் வர வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.