முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

திமுக வெற்றிக்கு தீவிர களப் பணி: பொன். முத்துராமலிங்கம் விளக்கம்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு தானும், தனது மகனும் தீவிர களப்பணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் பொன். முத்துராமலிங்கம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றிக்கு தானும், தனது மகனும் தீவிர களப்பணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீா்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

தினமணியின் தொகுதி அலசல் பகுதியில் சனிக்கிழமை வெளியான மதுரை வடக்குத் தொகுதி நிலவரம் குறித்த செய்தியில், இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்பளிக்கப்படாததால், அவரது மகன் அதிமுகவில் இணைந்தாா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம் அளித்த விளக்கம் : நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட நான் விருப்பம் தெரிவிக்கவே இல்லை. எனவே, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நானும், எனது மகன் மு. சேதுராமலிங்கமும் மதுரை வடக்கு தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக தீவிர களப்பணியில் இருக்கிறோம். திமுகவின் வெற்றியே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றாா் அவா்.