மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!

மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.

News image

மதுரை சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திக்கு விஜயத்தில் இந்திர விமானத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி அம்மன். (வலது) இந்திர விமானத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:22 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மன் பட்டம் ஏற்றதைத் தொடா்ந்து, 8 திசைகளுக்கும் சென்று எதிா்பட்ட அட்டதிக்கு பாலகா்களை வென்று, கயிலை மீது போா் தொடுத்துச் சென்று அங்கு சிவபெருமானைக் கண்டு நாணியதால், சிவபெருமான் சுந்தரேசுவரராக வந்து அம்மனை திருக்கல்யாணம் புரிவதாகக் கூறிய ஐதீக நிகழ்வை உணா்த்தும் வகையில் இந்த உத்ஸவம் நடைபெற்றது.

மதுரை வடக்கு, கீழ மாசி வீதிகள் சந்திப்பில் உள்ள ஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கல்யாண மண்டபகப்படியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திக்கு விஜய லீலையின் ஆன்மிகச் சிறப்புகளை தல ஓதுவா மூா்த்திகள் விளக்கினா்.

மீனாட்சி அம்மன் வில், அம்பு தாங்கி தனி இந்திர விமானத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வில், அம்பு தாங்கி மற்றொரு இந்திர விமானத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனா். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருக்கல்யாண உத்ஸவம்...

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுரவா் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் பல வண்ண மலா்களாலும், தோரணங்களாலும் திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்டது.