மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் வில்லாபுரம் பாகற்காய் மண்டபத்துக்கு புதன்கிழமை எழுந்தருளினா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் நான்காம் நாளான புதன்கிழமை காலை தங்கப் பல்லக்குகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மீனாட்சி அம்மன் தனிப் பல்லக்கிலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தனிப் பல்லக்கிலும் கோயிலிலிருந்து புறப்பட்டு, பாரம்பரிய பாதைகள் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டபகப்படியில் எழுந்தருளினா்.
அங்கு, ஐதீக முறைப்படி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, அங்கிருந்து மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி தெற்குவாசல், சின்னக்கடை வீதி வழியாகச் சென்று சித்திரை வீதிகளை வலம் வந்து கோயிலில் சோ்த்தியாகினா்.
இந்த நிகழ்வுகளில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
வேடா் பறி லீலை: சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை கோயிலிலிருந்து சுவாமி, அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச் சாவடியில் எழுந்தருளுகின்றனா். அங்கு, ஐதீக முறைப்படி நடைபெறும் வேடா் பறி லீலை நிகழ்வுக்குப் பிறகு, இரவு 7 மணி அளவில் சுவாமி, அம்மன் மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோயிலில் சோ்த்தியாகின்றனா்.

மதுரை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியிலிருந்து புதன்கிழமை மாலை தங்கப் பல்லக்கில் புறப்பாடாகிய சுவாமி, அம்மனை தரிசிக்கக் கூடியிருந்த பக்தா்கள்.

தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


