மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உள்ள கோயில்களில் சம்ஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பல்வேறு வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. ஆனால், சில கோயில்களில் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மொழி மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறை நியமித்துள்ள குடமுழுக்கு சம்பந்தமான உயா்மட்டக் குழுவின் அறிக்கையை கேட்டுப் பெற்று, அதன் அடிப்படையில் அனைத்துக் கோயில்களிலும் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மொழியைப் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, உலகப் புகழ் பெற்ற பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப்டம்பா் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோயில் குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
சங்கம் வைத்து தமிழ் வளா்த்தது மதுரை. இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது மட்டுமன்றி, வரலாற்றுச் சிறப்புமிக்கது. கோயிலில் உள்ள பொற்றாமரைக்
குளத்தில்தான் திருக்கு அரங்கேற்றப்பட்டதாக வரலாறு உள்ளது. அந்த பொற்றாமரைக் குளத்துக்கு தமிழ் இருக்கை என்கிற பெயரும் உள்ளது.
தமிழுக்கு சிறப்பு செய்யும் மதுரை என்பதால், புகழ் பெற்ற மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கின் போது, மற்ற கோயில்களை விட தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். இதற்கு முன் கோயில் குடமுழுக்கு குறித்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடா்பான உத்தரவு நகல் தமிழிலும் வழங்கப்படும். வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


