மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப். 18-ஆம் தேதி தொடங்குகிறது.


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப். 18-ஆம் தேதி தொடங்குகிறது.
திருவிழா நகரமான மதுரையின் மிக முக்கிய நிகழ்வாக விளங்குவது சித்திரைத் திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மதுரை சித்திரைத் திருவிழா வருகிற ஏப். 18-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற ஏப். 18-ஆம் தேதி வாஸ்து சாந்தியும், 19-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றமும் நடைபெறுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஸ்ரீமீனாட்சி பட்டாபிஷேகம் ஏப். 26-ஆம் தேதியும், திக்கு விஜயம் 27-ஆம் தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் 28-ஆம் தேதியும், தேரோட்டம் 29-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகா் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் உத்ஸவம் மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியாக காலை, மாலை இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...