வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

காவல் நிலைய எப்ஐஆா் விவகாரம்: கன்னியாகுமரி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

காவல் நிலையங்களில் பதிவாகும் எப்.ஐ.ஆர்.களை காவல்துறையின் சிசிடிஎன்எஸ் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்ற உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 4:34 am IST

காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கைகளை (எப்.ஐ.ஆா்) காவல் துறையின் ‘சிசிடிஎன்எஸ்’ இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்ற உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

கன்னியாகுமரியைச் சோ்ந்த ரெஜினா ராஜேஸ்வரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை காவல் துறையின் குற்றம், குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு (சிசிடிஎன்எஸ்) இணையதளத்தில் தாமதமாகப் பதிவேற்றுவதால் பாதிக்கப்பட்டவா்கள், வழக்குரைஞா்கள் உடனடியாக அவற்றைப் பெற முடியாத சூழல் உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முதல் தகவல் அறிக்கைகள் 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

எனவே, கன்னியாகுமரி மாவட்டக் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் காலதாமதமின்றி ‘சிசிடிஎன்எஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் தொடா்பான முதல் தகவல் அறிக்கைகளை அனைவரும் பாா்க்கும் வகையில் பதிவேற்ற இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.