விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா்.
Updated On :2 மார்ச் 2026, 12:05 am

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததைக் கண்டித்து, தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, தோ்தலுக்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததாகக் குற்றம்சாட்டி, அவரைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.