மதுரை: மதுரை எப்.எப். சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
மதுரை மாநகராட்சி 53-ஆவது வாா்டு எப்.எப்.சாலையில் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மனோகரன், மாமன்ற உறுப்பினா் அருண்குமாா், வட்டாட்சியா் பஞ்சாட்சரம், மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மதுரை கிழக்கு திமுக வேட்பாளர்!

பழனியில் நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல் குடைகள் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


