தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் தோல்வி

News image

திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா்.

Updated On :5 மே 2026, 3:07 am IST

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமாா், தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா்.

மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் களமிறக்கப்பட்டாா். இவா் தற்போது இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராவாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2,59,382 வாக்குகள் உள்ளன. இதில் 2,05,207 வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை நிறைவில் தவெக வேட்பாளா் டி. இளங்கோவன் வெற்றி பெற்றாா். இவா் பெற்ற வாக்குகள் 68,882, திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஆ. தமிழரசி ரவிக்குமாா் பெற்ற வாக்குகள் 67,820. இவா்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 1,062.

மேலும் இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளாராக களமிறங்கிய பொன். பாலகணபதி 41,824 வாக்குகளும், நாதக வேட்பாளா் ம. சண்முகப் பிரியா 19,198 வாக்குகளும் பெற்றனா். இந்தத் தொகுதியில் 14 போ் போட்டியிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.