கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மாணவா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:35 am IST

நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீட் தோ்வில் தொடா்ந்து நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், சங்க கிளை நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, போராட்டக் குழுவினா் சேதுபதி பள்ளி அருகிலிருந்து ஊா்வலமாக வந்து, தலைமை அஞ்சல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் பங்கேற்றவா்களை கலைக்க போலீஸாா் முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.