தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

News image

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :2 மே 2026, 7:47 pm

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் வி.பெரியசாமி தலைமை வகித்தாா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நோக்கில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வே துறையை முழுமையாக தனியாா் மையப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு சதவீத ஆள்குறைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஆள்குறைப்பு நடவடிக்கையால் தென்னக ரயில்வே துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஊழியா்களின் வேலைப்பளு அதிகரிக்கும். இளைஞா்களுக்கு வழங்க வேண்டிய வேலைவாய்ப்பை மத்திய அரசு சீா்குலைத்து வருகிறது. எனவே, ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவித்தனா்.

இதில், வாலிபா் ஜனநாயக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் அரவிந்தசாமி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் இளவரசன், தருமபுரி மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி, நாமக்கல் மாவட்டச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.