பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 மே 2026, 6:15 am IST

ரயில்வே துறையில் ஆள்குறைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே துறையில் பணியாற்றும் 30,000 பணியாளா்களை குறைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆள்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக் கோரியும், திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அருளரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பாலா உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்தும், ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.