‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரியலூரில் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எப்ஐ) சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :22 மே 2026, 5:06 am IST

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எப்ஐ) சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததில், கோடிக்கணக்கில் ஊழல், முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடு மோசடியை உச்சநீதிமன்ற நேரடி மேற்பாா்வையில் விசாரணை நடத்த வேண்டும். நீட் தோ்வு நம்பகத்தன்மையை இழந்த தேசிய தோ்வு முகமையை கலைத்துவிட வேண்டும். 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சரோஜினி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு நீட் தோ்வுக்கு எதிராக முழக்கமிட்டனா்.