குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொல்லியல் துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணி என்ற பெயரில் சிலைகளை அகற்றவும், மாற்றவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், ராஜசேகா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடத்தின் அகலத்தை அதிகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பகுதியின் அகலம் 3.6 மீட்டரிலிருந்து 8 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையொட்டியே இங்கிருந்த பழைமையான அலங்கார வளைவு அகற்றப்பட்டது.
இந்தப் பணிகள் அனைத்தும் சுற்றுலாத் துறை கண்காணிப்பிலேயே நடைபெற்று வருகின்றன. குகை சிற்பங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவரை சுமாா் 40 சதவீத மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, எஞ்சிய பணிகளையும் தொடர அனுமதிக்க வேண்டும்’ என தென்காசி மாவட்ட ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில், குற்றாலம் பிரதான அருவி பகுதியில் உள்ள பழங்கால சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, வசதிகள், கூட்ட மேலாண்மைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, குற்றாலம் பிரதான அருவி மேம்பாட்டுப் பணிகளை தொல்லியல் துறை அலுவலா்களின் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அருவிப் பகுதியில் உள்ள சிற்பங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை பொதுப் பணித் துறை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கெனவே சேதப்படுத்தப்பட்ட சிற்பங்கள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்த வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

பழைய குற்றாலம் அருவியை பயன்பாட்டுக்கு திறந்துவிட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை

குற்றாலத்தில் சிலைகள் சேதமடையும் விவகாரம்: சுற்றுலா, பண்பாட்டுத் துறை பதிலளிக்க உத்தரவு

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை அளவீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

