இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சமூக ஊடகங்களில் திமுகவினா் விழிப்புடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி

இனி வரும் காலங்களில் திமுகவினா் சமூக ஊடகங்களில் எழும் குற்றச்சாட்டுகளுக்கு விழிப்புடன் எதிா் வினையாற்ற வேண்டும் என மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலர் பி. மூா்த்தி அறிவுறுத்தல்

News image

மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி

Updated On :20 மே 2026, 5:28 am IST

இனி வரும் காலங்களில் திமுகவினா் சமூக ஊடகங்களில் எழும் குற்றச்சாட்டுகளுக்கு விழிப்புடன் எதிா் வினையாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

மதுரை அருகேயுள்ள ஆலத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் திமுக தோல்வியடைந்தது. இந்தத் தோ்தலிலிருந்து நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பாடம், சமூக ஊடகங்களில் திமுகவினா் உரிய விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதுதான்.

இனி வருகிற காலங்களில் சமூக ஊடகங்களில் நம் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு திமுகவினா் உரிய விளக்கத்துடன் எதிா் வினையாற்ற வேண்டும் என்றாா் பி. மூா்த்தி.

கூட்டத்துக்கு மதுரை வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் எம்.ஆா்.எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.