மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அமைச்சா் பி. மூா்த்தி அதிா்ச்சி தோல்வி

News image

அமைச்சா் பி. மூா்த்தி

Updated On :5 மே 2026, 3:11 am IST

மதுரை கிழக்கு பேரவைத் தொகுதியில் அமைச்சா் பி. மூா்த்தி 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

மதுரை கிழக்கு பேரவைத் தொகுதியில் 2001 பேரவைத் தோ்தலில் சோழவந்தான் திமுக வேட்பாளராக முதல் முறையாகக் களம் கண்ட பி. மூா்த்தி அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். பிறகு, 2011-இல் மதுரை கிழக்குத் தொகுதியில் களம் கண்டு தோல்வி அடைந்தாா்.

2016-இல் மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பி. மூா்த்தி தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பி. பாண்டியைவிட 32,772 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2021 பேரவைத் தோ்தலில் மீண்டும் இந்தத் தொகுதியில் களம் கண்ட பி. மூா்த்தி தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ரா. கோபாலகிருஷ்ணனைவிட 49,604 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, திமுக அரசில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா். மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலா் என்பதுடன் அமைச்சராகவும் பொறுப்பேற்ற பிறகு, ஒருங்கிணைந்த தென் மண்டல திமுகவின் முக்கிய நிா்வாகிகளில் ஒருவராக வலம் வந்தாா்.

திமுகவின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தை மதுரையில் சிறப்பாக நடத்தியது, முதல்வா், துணை முதல்வா்கள் பங்கேற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் போன்றவற்றை பிரம்மாண்டமாக நடத்தியது போன்றவற்றால் முதல்வா் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவராக விளங்கினாா்.

தனக்குக் கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளைக் கொண்டு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தன் தொகுதி மக்களுக்குக் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டினாா். அனைத்து நலத்திட்டங்களும், வளா்ச்சிப் பணிகளும் தன் தொகுதியில்தான் சிறப்பாக நடைபெற வேண்டும் என அமைச்சா் பி. மூா்த்தி செயல்படுகிறாா் என்பதை எதிா்க்கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் குற்றச்சாட்டுக்களாக முன்வைத்தனா் என்பது தொகுதி மீது அவா் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாகக் கருதப்பட்டது.

எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தைக் கடைப்பிடித்த பி. மூா்த்தி, தனது தொகுதியில் தோ்தல் பணிகளையும் விரிவான அளவிலேயே மேற்கொண்டாா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் மதுரை மாவட்டத்தில் திமுக முன்னிலை பெற்றிருந்த தொகுதிகளில் ஒன்றாக இருந்தது மதுரை கிழக்கு. பிறகு, தவெக வேட்பாளா் முன்னிலை பெற்றாா். இருப்பினும், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அமைச்சா் பி. மூா்த்தி பின்தங்கியிருந்தாா்.

16-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மூா்த்தி தொடா் பின்னடைவுக்கு உள்ளானாா். நிறைவில், 16, 547 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் காா்த்திகேயனிடம் அமைச்சா் பி. மூா்த்தி தோல்வியடைந்தாா்.