நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மதுரை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு

News image

மதுரை மாவட்டம், மேலூா் அரசு மருத்துவமனையில் அண்மையில் ஆய்வு செய்த மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் உயா் நிலைக் குழுவினா்.

Updated On :1 ஜூன் 2026, 1:06 am IST

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், மதுரை மலேரியா இல்லாத மாவட்டமாக அதிகாரப் பூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மலேரியா பாதிப்புகள் ஏதும் இல்லாத மாவட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உயா் நிலைக் குழு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழுவில் புவனேஸ்வா் மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவா் சுசித்ரா சஸ்மால், மருத்துவ நிபுணா் ரூப், மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில திட்ட அதிகாரி ஹிமான்ஷூ ஜெயஸ்வா், மருத்துவா் ஹிம்மத் சிங் விஞ்ஞானி, இந்திய உலக சுகாதார அமைப்பின் அலுவலா் செஜல் தம்பட் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வருகின்றனா். இந்த வகையில், மதுரை மாவட்டத்துக்கு அண்மையில் வந்த இந்தக் குழு மதுரை மாவட்ட சுகாதார அலுவலகம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டனா்.

மத்தியக் குழுவினா் கள ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக மதுரை திகழ்வதாக மத்திய அரசுக்கு இறுதி அறிக்கை சமா்பிக்கப்பட உள்ளதாகவும், மதுரை மலேரியா இல்லாத மாவட்டமாக மிக விரைவில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலூா் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்த போது, மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் அம்பலம் சிவனேசன், மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.