கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளி மாணவர்களுக்கு இலவச தமிழ் அகராதி

ரெட்டியார்சத்திரம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச தமிழ் அகராதி மற்றும் நோட்டுகளை முன்னாள் அமைச்சர் இ. பெரியசாமி வழங்கினார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:04 pm

தினமணி

ரெட்டியார்சத்திரம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச தமிழ் அகராதி மற்றும் நோட்டுகளை முன்னாள் அமைச்சர் இ. பெரியசாமி வழங்கினார்.

   திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் இ. பெரியசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 13.25 லட்சம் செலவில், நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

  அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னு என்ற முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் பழனிச்சாமி, நடுப்பட்டி ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில், எம்.எல்.ஏ. இ. பெரியசாமி கலந்துகொண்டு, பள்ளியின் நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவரை திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச தமிழ் அகராதி மற்றும் நோட்டுகளை வழங்கிப் பேசினார்.

  நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றியத் தலைவர் கு. சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக செயலர் ப. சிவகுருசாமி, வேடசந்தூர் முன்னாள் ஒன்றியத் தலைவர் பிரியம் நடராஜன், கவிதா பார்த்தீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.