அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின் கம்பி அறுந்ததால் வீடுகளில் மின்சாதனங்கள் பழுது

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட மின் அழுத்தத்தின் காரணமாக வீடுகளில் இயங்கிய மின்சாதனப் பொருள்கள் பழுதாகின.

News image
Updated On :5 ஜனவரி 2013, 9:12 pm

தினமணி

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட மின் அழுத்தத்தின் காரணமாக வீடுகளில் இயங்கிய மின்சாதனப் பொருள்கள் பழுதாகின.

 திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சனிக்கிழமை அதிகாலை லாரி மோதியுள்ளது. அப்போது அந்தப் பகுதியில் மின்தடை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அங்கிருந்து லாரி சென்றதாகக் கூறப்படுகிறது.

 லாரி மோதியதில் மின் கம்பிகள் அறுந்து ஒன்றொடு ஒன்று உராய்ந்த நிலையில் கிடந்துள்ளன. பின்னர் தடை நீக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்த போது அறுந்து கிடந்த கம்பிகளில் உயர் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த மின் சாதனங்களான தொலைக்காட்சி, மிக்ஸி, செல்போன் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

  உடனடியாக மின் வாரிய அதிகாரிகளுக்கும், சீலப்பாடி ஊராட்சி மன்ற  அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின் வாரிய ஊழியர்கள் மூலம் மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.