நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

229 பேருக்கு உதவித் தொகை ஆணை

மாற்றுத்திறனானிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 223 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Updated On :13 மே 2013, 12:10 am IST

மாற்றுத்திறனானிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 223 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

 வடமதுரை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு, ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு கரூர் மக்களவை உறுப்பினர் மு.தம்பித்துரை முன்னிலை வகித்தார்.

 முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதில் தகுதியுடைய 229 பேருக்கு, மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மு.தம்பித்துரை எம்.பி., ஆட்சியர் ந.வெங்கடாசலம், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ச.பழனிச்சாமி ஆகியோர் வழங்கினர்.

 அதேபோல் கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறன் கருவிகள், மோட்டர் பொருத்திய  மூன்று சக்கர வண்டிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.

  முகாமில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் உதவித் தொகையினை பெறுவதற்கு, மாவட்ட ஆட்சியரை அணுகி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிகழ்ச்சியில் மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் கனகராஜ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் ஆர்.அழகர்சாமி (வடமதுரை), சுப்பிரமணியன் (வேடசந்தூர்), பேரூராட்சி தலைவர்கள் .எம். பாப்பாத்தி (வடமதுரை), ராஜலெட்சுமி (அய்யலூர்), வட்டாட்சியர் மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.