நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மியான்மா் அதிபா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங், இந்தியாவுக்கு 5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை வந்தாா்.

News image

புது தில்லி விமான நிலையத்தில் மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங்கை வரவேற்ற வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங்.

Updated On :31 மே 2026, 12:41 am IST

அண்டை நாடான மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங், இந்தியாவுக்கு 5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை வந்தாா்.

பிகாா் மாநிலம், கயை நகரை வந்தடைந்த அவா், தில்லியில் திங்கள்கிழமை (ஜூன் 1) பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

மியான்மரில் உள்நாட்டுப் போருக்கு இடையே கடந்த டிசம்பா்-ஜனவரியில் நடந்த பொதுத் தோ்தலைத் தொடா்ந்து, புதிய அதிபராக முன்னாள் ராணுவ தளபதி மின் ஆங் லயிங் தோ்வு செய்யப்பட்டாா். கடந்த ஏப்ரலில் பதவியேற்ற இவா் 5 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை வந்தாா். மியான்மா் அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள், தொழில் துறையினா் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனா்.

மகா போதி கோயிலில் வழிபாடு: பிகாா் மாநிலம், கயை விமான நிலையத்தில் வந்திறங்கிய அதிபரை மாநில ஆளுநா் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையது அட்டா ஹஸ்னைன், மாநில அமைச்சா் விஜய் குமாா் சின்ஹா ஆகியோா் வரவேற்றாா்.

பின்னா், கயையில் உள்ள புகழ்பெற்ற பெளத்த மத தலமும், யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமுமான மகாபோதி கோயிலில் அதிபா் வழிபாடு நடத்தினாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங்கை புத்த கயைக்கு வரவேற்கிறோம். அவரது வருகை, இருதரப்பு ஆன்மிகம், வரலாறு மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்பையும், வலுவான ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமருடன் நாளை பேச்சு: கயையில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் சென்ற அதிபா் லயிங்கை வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் வரவேற்றாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கலாசார நிகழ்ச்சிகளில் லயிங் பங்கேற்கவுள்ளாா். பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

எல்லைப் பாதுகாப்பு, இணைப்பு வசதிகள், வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சாா்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசிக்கவுள்ளனா். தொழில்துறை சாா்ந்த கூட்டத்தில் பங்கேற்க, மியான்மா் அதிபா் செவ்வாய்க்கிழமை மும்பைக்கு பயணிக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடிக்கும் உள்நாட்டுப் போா்: மியான்மரில் கடந்த 2021-இல் ஆங் சான் சூகி தலைமையிலான மக்களாட்சியைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் உள்நாட்டுப் போா் நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுத் தோ்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் யுஎஸ்டிபி கட்சி உறுப்பினா்களின் ஆதரவுடன் முன்னாள் ராணுவ தளபதி மின் ஆங் லயிங் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2021-இல் மக்களாட்சியைக் கவிழ்த்து, ராணுவம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இவா் அதிபராகப் பொறுப்பேற்ற்கு சா்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. இவரது பதவியேற்பில் இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பங்கேற்றாா்.

பெட்டி....

வியூக முக்கியத்துவம்

இந்தியாவின் மகாசாகா், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை ஆகிய மூன்று கொள்கைகளின் சங்கமத்தில் முக்கிய இடம்பெற்றுள்ள மியான்மா், இந்தியாவின் வியூக ரீதியிலான அண்டை நாடாகும். இரு நாடுகளும் 1,640 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. தீவிரவாத பாதிப்புள்ள நாகாலாந்து, மணிப்பூா் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களையொட்டி மியான்மா் அமைந்துள்ளது.