நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பொன்விழா ஆண்டு மற்றும் ஸ்வர்ண ஜெயந்தி யாத்திரையை முன்னிட்டு பழனி அடிவாரம் பாதவினாயகர் கோயில் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஹேச்பி மாவட்ட பொறுப்பாளர் சிவராஜ் குருக்கள் தலைமை வகித்தார். கந்தவிலாஸ் செல்வக்குமார், 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 12:24 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

பொன்விழா ஆண்டு மற்றும் ஸ்வர்ண ஜெயந்தி யாத்திரையை முன்னிட்டு பழனி அடிவாரம் பாதவினாயகர் கோயில் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஹேச்பி மாவட்ட பொறுப்பாளர் சிவராஜ் குருக்கள் தலைமை வகித்தார். கந்தவிலாஸ் செல்வக்குமார்,  ஹோட்டல் கண்பத் இயக்குனர் ஹரிஹரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன், வருத்தமில்லா வாலிபர் சங்க ஆலோசகர் தேரடி பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விஹெச்பி நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.  விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றதை பலரும் ரசித்தனர்.    கிருஷ்ணர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி இல்லை என தெரிவித்ததால் குழந்தைகள் ஆட்டோக்களில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். விழாவில் அடிவாரம் சோழிய வேளாளர் சங்க தலைவர் மதனம், வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, அரிமா சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.