முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சென்னை காவல் சார்பு-ஆய்வாளரின் மகள் தனது காதலனை திருமணம் செய்துகொண்டு, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை தஞ்சம் அடைந்தார்.

Published On :

சென்னை காவல் சார்பு-ஆய்வாளரின் மகள் தனது காதலனை திருமணம் செய்துகொண்டு, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை தஞ்சம் அடைந்தார்.

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்தவர் ராசய்யா. இவரது மகன் பிரான்சிஸ் ஆன்டோ பிரின்ஸ் (23). சென்னையில் வேலைபார்த்து வந்தார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேந்திரன், வேப்பேரி காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சிந்து (22), அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், பிரான்சிஸ் ஆன்டோ மற்றும் சிந்து ஆகியோருக்கு இடையே காதல்  ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால், சுரேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி திருமணம் செய்துகொண்ட இவர்கள், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை தஞ்சமடைந்தனர். இவர்களிடம், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.